வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். படம் நீண்ட எதிர்பார்ப்பு இருப்பதால் மிக விறுவிறுப்பாக இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாத கடைசிக்குள் இப்ப படப்பிடிப்பு முழுமையாக முடிந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தில் வில்லன் போல் தோற்றமளிக்கும் அப்பா ஒரு கதாபாத்திரமாகவும் ஹீரோ போல் இருக்கும் மகனாக ஒரு கதாபாத்திரமாகவும் டபுள் ஆப்ஷனில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
நடித்துக் கொண்டிருக்கும் கோட் படமும் அடுத்த படமான 69 வது படமும் முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக இறங்கப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். அதனால் விஜய் நடிக்கும் இந்த இரண்டு படங்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது விஜயின் சில படங்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் வந்து ரசிகர் மத்தியில் சொதப்பியது போல் இப்படம் அமைந்து விடக்கூடாது என்பதற்காக வெங்கட் பிரபு இப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் VFX, CG மூலமாக விஜய் அவர்களை சிறப்பாக உருவாக்கி வருகிறேன் என்று வெங்கட் பிரபு தற்போது தெரிவித்திருந்த.
தற்போது ஏப்ரல் மாதத்துடன் கடைசி படப்பிடிப்பும் முடியும் நிலையில் அந்த ஷூட்டிங்கை கேரளாவில் வைத்து எடுக்க உள்ளதாக தகவல் கசிந்திருந்தது. தற்போது இதற்காக விஜய் அவர்கள் நெய்வேலி மற்றும் கேரளாவில் உள்ள திருமணமந்தபுரத்திற்கு கோட் படம் சூட்டிங்காக சென்று உள்ளார். விஜய் அங்க வந்துள்ளார் என்று தெரிந்தவுடன் மாபெரும் ரசிகர் பட்டாளமே விமான நிலையத்தை சுற்றி வளைத்து விட்டார்கள்.
தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் விஜய்க்கு மாபெரும் ரசிகர் கூட்டம் இருந்து வந்த நிலையில், விஜய் எப்பொழுது கடைசி படப்பிடிப்பிற்காக கேரளா வருவார் என்று காத்துக் கொண்டிருந்த மொத்த ரசிகர் கூட்டம், இவர் வந்ததை அறிந்தவுடன் விஜயின் மெல் இருக்கும் பாசத்தை காட்டும் விதமாக ஏர்போர்ட்டையே சுற்றி வளைத்து உள்ளார்கள். விஜயும் தன்மேல் இருக்கும் பாசத்தை கட்டுவதற்காக இவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறது என்பதற்காக பொறுமையாக நின்று எல்லோரையும் பார்த்து தன் அன்பை செழித்து விட்டு தான் அங்கிருந்து சென்றிருக்கிறார்.
be it neyveli tamilnadu or trivandrum kerala , STARDOM SPEAKS ❤️????????????#VIJAYStormHitsKerala pic.twitter.com/AJLWBhzSjM
— Arun Vijay (@AVinthehousee) March 18, 2024