அரியலூர் மாவட்டம் கோரியாம்பட்டியைச் சேர்ந்த, பாலிடெக்னிக் இறுதி ஆண்டு மாணவர் அஜய் (19). தனது கனவு பைக்கை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கல்லூரி நேரம் போக, கூலி வேலைகள் செய்து சிறுகச் சிறுகச் சேமித்து வந்துள்ளார். இவரது சேமிப்புடன், தாய் அமுதா, சிங்கப்பூரில் உள்ள தாய் மாமா மற்றும் அத்தை தனலட்சுமி ஆகியோரின் உதவியுடன், இரண்டே முக்கால் லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை முழுத் தொகையும் செலுத்தி அஜய் வாங்கியுள்ளார். இந்தப் பைக் வாங்கும் புகைப்படத்தை அஜயின் உறவினர் சமூக வலைதளங்களில் பகிரவே, இது கடந்த இரண்டு நாட்களாகக் கடும் பேசுபொருளாக மாறியது.
புகைப்படத்தில், அருகில் எவ்வித நகையும் அணியாமல் இருந்த அத்தை தனலட்சுமியை அஜய்யின் தாயார் எனத் தவறாகக் கருதிய நெட்டிசன்கள், ‘ஏழ்மை நிலையில் உள்ள ஒருவருக்கு இவ்வளவு விலை உயர்ந்த பைக் தேவையா?’ என்று கேட்டு விமர்சிக்கத் தொடங்கினர். சிலர் நகை அணியாத அத்தை தனலட்சுமியின் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகை அணிந்ததைப் போல மாற்றி மீம்ஸ்களாகப் பரப்பினர்.
இதற்குப் பதிலளித்த அஜய்யின் தாய் அமுதா, “இது எங்கள் சொந்த உழைப்பில் சிறுகச் சிறுகச் சேமித்த பணம். எங்கள் மகனுக்குப் பிடித்த வண்டியை வாங்கிக் கொடுத்ததில் உங்களுக்கு என்னப் பிரச்சினை? என் மகனுடன் நிற்பது எனது நாத்தனார். அவருக்கு எல்லா வசதிகளும் உள்ளன. கிராமப்புறங்களில் வேலை செய்யும் அனைவரும் எல்லா நேரமும் நகைகள் அணிந்திருக்க மாட்டோம்” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
அஜய் பேசுகையில், “நான் கடன் வாங்கவில்லை; கல்லூரி போகும் நேரம் போக வேலை செய்து சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில் குடும்பத்தின் பங்களிப்புடன் வாங்கியுள்ளேன். ஆனால், இந்த விமர்சனங்களால் கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். தயவுசெய்து எங்களைப் பற்றி யாரும் விமர்சிக்க வேண்டாம்” என்று கோரிக்கை வைத்தார். ஆலைத் தொழிலில் இருப்பதால் தான் அணிகலன்கள் அணிய இயலாது என்று அத்தை தனலட்சுமியும் விளக்கம் அளித்துள்ளார்.
கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…
செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…
பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான…
நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி…
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட…