ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மவரம் அருகே உள்ள ரப்தாடு அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பயிலும் கோபிகா என்ற மாணவி மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், மாணவி கோபிகாவைத் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மாணவியை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பள்ளி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்திய போலீசார், மாணவி மீது தாக்குதல் நடத்திய குற்றவாளி ஹேமந்த் என்பதை அடையாளம் கண்டனர். குற்றவாளியைப் பிடிக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தர்மவரம் ரயில் நிலையத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி ஹேமந்தை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பள்ளி மாணவி மீதான இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்ன என்பது குறித்தும், குற்றவாளியின் பின்னணி குறித்தும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும், பெற்றோர் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…
திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…
மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னன், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30…
மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…