Connect with us

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கடத்தப்பட்டாரா…?  வைரலாகும் வீடியோ…! உண்மையை உடைத்த கவுதம் கம்பீர்…!

CINEMA

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கடத்தப்பட்டாரா…?  வைரலாகும் வீடியோ…! உண்மையை உடைத்த கவுதம் கம்பீர்…!

 

1959-ம் ஆண்டு ஜனவர் 6-ம் தேதி பஞ்சாப்பின் சண்டிகரில் பிறந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் . 10 பேர அடிச்சு நான் டான் ஆகல நான் அடிச்ச 10பேரும் டான் தான் என புகழ்பெற்ற லார்ட்சில் உலகக்கோப்பை முத்தமிட்டு இந்தியர்களின் ஹீரோவானார் கபில். 1983-ல் களமிறங்கிய அணிகளில் இந்தியா ஒரு கத்துக்குட்டி தான் இரண்டுமுறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் தான் மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை ஏந்தும் என கிரிக்கெட் உலகம் போட்ட கணக்கை தப்பு கணக்காக்கினார் கபில்.

   

தற்பொழுது கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக தனது பணியை தொடர்ந்து வருகின்றார். இந்நிலையில், அவர் கடத்தப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் கபில் தேவின் வாய் மற்றும் கை ஆகியவை கட்டப்பட்டு, அவரை இரண்டு மூன்று பேர் சேர்ந்து இழுத்து செல்வது போல வீடியோ இடம்பெற்றுள்ளது. இதனை பகிர்ந்துள்ள கம்பீர், இது வெறும் பிரமோஷன் வீடியோவா? அல்லது உண்மையானதா? என்று கேள்வி எழுப்பினார்.  இதைப்பார்த்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால், உடனே இது குறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில் வரும் உலகக்கோப்பையை முன்னிட்டு, எடுக்கப்பட்ட வீடியோவே இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை விளம்பரப்படுத்தும் விதமாக விளம்பரத்திற்காக OTT செயலியான Disney+ Hotstar உடன் இணைந்து பணியாற்றுகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றில் அவர் நடித்துள்ளார். அதில், அவர் கிராமத்தினர்களால கடத்தப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோ உண்மை என நம்பி பதட்டம் அடைந்து விட்டனர். ஆனால் இந்த வீடியோ உண்மையல்ல. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by DailyThanthi (@dailythanthinews)

Continue Reading
To Top