அரசுக்கு சப்போர்ட், ஆனா விஜய்க்கு ஆப்பு?… கூட்டணிக் கட்சிகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய CPI… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

By Nanthini on ஆடி 14, 2026

Spread the love

தமிழக அரசியலில் அரங்கேறி வரும் பரபரப்பான நகர்வுகள், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்து வரும் கூட்டணிக் கட்சிகளே தவெகவிற்கு எதிராகக் குரலெழுப்பி வரும் நிலையில், தமிழகத்திலும் ‘குதிரை பேரம்’ (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் அரசியல் சதி) நடப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து செயல்படக்கூடும் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பலமாக அடிபடுவதால், தவெக மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) காட்டி வந்த இணக்கமான போக்கில் தொய்வு ஏற்பட்டு, இரு தரப்புக்கும் இடையேயான நெருக்கம் படிப்படியாகக் குறைந்து வருவது தற்போதைய அரசியல் சூழலில் உற்றுநோக்கத்தக்க மாற்றமாக மாறியுள்ளது.