“2021-ல் 2 வெற்றி… 2026-ல் 15 தொகுதிகள்?”… காங்கிரஸ் கோட்டையில் கம்யூனிஸ்ட் கொடி…. அதிர்ச்சியில் அறிவாலயம்…..!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெற வியூகம் வகுத்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, இம்முறை 15 தொகுதிகள் அடங்கிய ஒரு உத்தேசப் பட்டியலைத் தயாரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் இந்தப் பட்டியலை அளிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாரித்துள்ள இந்தப் பட்டியலில் சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய மண்டலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மதுரவாயல் அல்லது பெரம்பூர் தொகுதியையும், கட்சியின் பலம் வாய்ந்த திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு அல்லது தெற்கு தொகுதியையும் அவர்கள் குறி வைத்துள்ளனர். இது தவிர, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு அல்லது கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்குமாறு திமுகவிடம் கோரிக்கை வைக்க அக்கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

எனினும், சிபிஎம் கோரும் சில தொகுதிகள் தற்போது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதிகளைக் காங்கிரஸ் விட்டுக்கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல், மதுரை மேற்கு, நன்னிலம் மற்றும் திருப்பூர் வடக்கு ஆகிய தொகுதிகள் தற்போது அதிமுகவின் வசம் இருப்பதால், அங்குப் போட்டியிட்டு வெற்றி பெறுவது சிபிஎம் கட்சிக்குக் கடும் சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட 6 தொகுதிகளில் கீழ்வேளூர் மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில், கடந்த முறையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான தொகுதிகளை அக்கட்சி கோருவது திமுக தலைமையைப் பரிசீலிக்க வைக்குமா அல்லது இழுபறி நீடிக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும். தொகுதிகளைப் பிரிப்பதில் கூட்டணிக் கட்சிகளிடையே சுமூகமான முடிவு எட்டப்படுமா என்பதைப் பொறுத்தே தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago