அட இத யாரும் எதிர்பார்க்கலையே…. விஜய் அமைச்சரவையில் இணையும் கம்யூனிஸ்ட்?… ஓசூரில் வெடித்த புதிய அரசியல் வெடிகுண்டு….!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறுவதற்கான சூழல் கனிந்து வருவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். ஓசூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தமிழக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் இணையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் காலம் நெருங்குவதாகவும், அந்தச் சூழல் வரும்போது ஓசூர் மண்ணில் இருந்து கூட தோழர்கள் அமைச்சர்களாக வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.

தற்போது தளி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ-வாக ராமச்சந்திரன் பதவி வகித்து வரும் நிலையில், வீரபாண்டியனின் இந்த ஓசூர் பேச்சு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைச்சரவையில் சேர்க்க தவெக தரப்பில் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், தொடக்கத்தில் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு என்ற தங்களது நிலைப்பாட்டில் கம்யூனிஸ்ட்கள் உறுதியாக இருந்தனர். தற்போது தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ள பின்னணியில் வீரபாண்டியன் இவ்வாறு பேசியுள்ளார்.

மறுபுறம், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக-வுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்துப் பேசிய வீரபாண்டியன், அதுபற்றி தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்பவே முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். மேலும், இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் என எந்தத் தேர்தலாக இருந்தாலும் அந்தந்த நேரத்து அரசியல் சூழலுக்கு ஏற்பவே கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் கூட்டணியைத் தீர்மானிக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியின் தனித்துவத்தை அவர் அழுத்தமாகப் பதிவு செய்தார். ஒருவேளை தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டிய சூழல் உருவானால், கம்யூனிஸ்ட்களால் தனித்தே களம் காண முடியும் என்றும், தங்களுக்கு என்று தனி வாக்கு வங்கியும் வாக்களிக்கக் கூடிய மக்களும் உள்ளதால் அத்தகைய சூழலில் தனித்து நிற்கவும் தயங்கமாட்டோம் என்றும் கூறினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு தளி தொகுதியில் ராமச்சந்திரனும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்தும் வெற்றி பெற்றுள்ள நிலையில், வீரபாண்டியனின் தற்போதைய பேட்டி தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

29 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

53 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

1 மணத்தியாலம் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

1 மணத்தியாலம் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago