திமுகவுக்கு இப்படி ஒரு சிக்கலா?… NDA இறக்கிய வேட்பாளரால் கடும் அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின்.. எப்படி சமாளிக்கப் போகிறார்…?

By Nanthini on ஆவணி 18, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தமிழகத்தில் இடம் பிடிக்கும் என இபிஎஸ் ஓடிக்கொண்டிருக்கின்றார். இவர்களுக்கு நடுவே அன்புமணி மற்றும் ராமதாஸ் ஒரு பக்கம் அடித்துக் கொண்டிருக்க மறுபக்கம் விஜய் மக்களுக்கு தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக புதிய ஆட்சியை தரப்போகிறேன் என்று சூளுரைத்து வருகிறார்.

என்னதான் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுக கூட்டணி பலமாக இருப்பதால் வெற்றி நமக்கு தான் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கையில் உள்ளார். இந்நிலையில் NDA வின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணனை பாஜக களம் இறக்கியுள்ளது திமுகவுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. INDIA கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, அந்தக் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்குமா? தமிழர் என்ற அடிப்படையில் சிவி ராதாகிருஷ்ணனை ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை INDIA கூட்டணி வேட்பாளரை திமுக ஆதரித்தால் அதை கூறிய பாஜக அரசியல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதனால் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்வது என்று தெரியாமல் அப்செட்டில் உள்ளார்.