பொதுவாகவே பால் பொருட்கள் மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இது கால்சியத்தின் சிறந்த மூலமாகவும். வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமானது. ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் பால் குடிக்க வேண்டும் அல்லது தயிர் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எப்போதுமே பரிந்துரை செய்கின்றன. தயிர் என்றாலே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆனால் பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரை விட எருமை தயிரில் அதிக புரதம், கொழுப்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை காணப்படுகிறது.
பசும்பாலை விட எருமை பாலில் 10 முதல் 11 சதவீதம் அதிக புரதம் செரிந்து காணப்படுகின்றது. இது அதிக வெப்பத்தை எதிர்க்கும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் புரதத்தின் அளவு காரணமாக பச்சிளம் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு எருமைப்பால் பரிந்துரைக்கப்படுவது கிடையாது. எருமை தயிரில் காணப்படும் அதிகப்படியான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு உறுதி அடையவும் பல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவும். தயிரில் இயற்கையான ப்ரோ பயோடிக் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். கோடை காலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இது தீர்வாகும்.
எருமை தயிர் பசு தயிரை விட நீண்ட நேரம் வரை நிறை உணர்வை கொடுக்கும். அதனால் இதை எடுத்துக் கொள்வதால் அதிக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியும். குறிப்பாக உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு எருமை தயிர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். முடி வளர்ச்சிக்கும் தோல் பிரச்சனைகளுக்கும் இது ஒரு நிரந்தர தீர்வாக இருக்கும்.
