“ஆயுள் தண்டனை கைதிகளுக்குள் மலர்ந்த காதல்…” யாரும் எதிர் பார்க்காத வழக்கு… உயர் நீதிமன்றம் கொடுத்த ‘அந்த’ அதிரடி உத்தரவு… சிறையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Visaka on ஆடி 19, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மாண்டோர் சிறைச்சாலையில், கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இரு கைதிகளுக்கு இடையே சிறை வளாகத்திலேயே திருமணம் செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜோத்பூரைச் சேர்ந்த மூலாராம் (33) என்பவர் அண்டை வீட்டாரைக் கொலை செய்த வழக்கிலும், மும்பையைச் சேர்ந்த சீமா காட்ஸே (31) என்பவர் தனது கணவரைக் கொலை செய்த வழக்கிலும் 2019 முதல் ஆயுள் தண்டனை பெற்று இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தில் விவசாயம் போன்ற அன்றாடப் பணிகளில் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து, தங்களது திருமணத்திற்கு அனுமதி கோரி இந்த காதல் ஜோடி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை நாடியது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி, திருமணம் செய்து கொள்வது என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும் என்று சுட்டிக்காட்டி இவர்களின் திருமணத்திற்குப் பச்சைக்கொடி காட்டியது. அதன்படி, மாண்டோர் சிறை வளாகத்திற்குள்ளேயே இவர்களது திருமணத்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திருமண நிகழ்வில் பூசாரி மற்றும் இருதரப்பு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உட்பட அதிகபட்சமாக 21 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், திருமணத்திற்கான முழுச் செலவுகளையும் மணமகன் மூலாராமே ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.