உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், வந்தே பாரத் விரைவு ரயில் முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் சூர்யகாந்த் (40) மற்றும் தீபாலி (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். லக்னோவின் ஜலால்பூர் கேட் அருகே தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த இவர்களது உடல்களைக் கைப்பற்றிய போலீசார், உடமைகளில் இருந்த ஆதார் அட்டைகள் மூலம் அவர்கள் யார் என்பதை உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சூர்யகாந்த் ஒரு தனியார் நிறுவனத்தில் களப் பணியாளராகவும், தீபாலி அதே அலுவலகத்தில் காசாளராகவும் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. கடந்த ஆறு மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சூர்யகாந்திற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஜனவரி 8-ம் தேதி அலுவலகம் சென்ற தீபாலி வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து போலீசார் இரண்டு தற்கொலைக் கடிதங்களை மீட்டுள்ளனர். தீபாலி எழுதிய கடிதத்தில், தனது செயலுக்காகப் பெற்றோரிடம் மன்னிப்புக் கோரியதோடு, தான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சூர்யகாந்த் தனது கடிதத்தில், தனது மனைவியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு, “நீதான் எனது முதல் காதல்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். தற்போது இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…