ஐயோ… ஆன்லைன் பேமெண்ட் ஆயிடுச்சு அண்ணா… போலி ஸ்கிரீன்ஷாட் காட்டி ஏமாற்ற பார்த்த ஜோடி… ஸ்பாட்டிலேயே வச்சு வச்சுச் செய்த கடைக்காரர்…!

By Swetha on ஆவணி 24, 2026

Spread the love

ஒரு காதலனும் காதலியும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அந்தப் பெண் சிகரெட்டும் குளிர்பானமும் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, பாழடைந்த சாலையின் அருகே இருந்த ஒரு கடைக்குச் சென்று இருவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர்.

அவர்களது மொத்த பில் தொகை ரூ 480 ஆக இருந்தது. பணத்தைச் செலுத்துமாறு கடைக்காரர் கூறியபோது, தங்களிடம் ரொக்கம் இல்லை என்றும் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்வதாகவும் கூறி ஜிபே விவரங்களைக் கேட்டுள்ளனர். தொடர்ந்து, போலி ஆன்லைன் பரிவர்த்தனைத் திரையைக் காண்பித்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

   

ஆனால், உஷாரான கடைக்காரர் உடனடியாகத் தனது வங்கிச் கணக்கைச் சரிபார்த்தபோது பணம் வரவில்லை என்பதை உணர்ந்தார். உடனே தனது பைக்கில் இருவரையும் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தார். பணம் வரவில்லை என்று அவர் கூறியபோதும் இருவரும் பொய் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில், கடைக்காரர் 112 என்ற அவசர எண்ணிற்கு அழைக்க, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.