“அரசு வேலை” போய்விடுமோ என்ற பயத்தில்… குழந்தையை காட்டுக்குள் வீசிய தம்பதி… வெளியான பகீர் பின்னணி..!!

By Soundarya on ஐப்பசி 3, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நந்தன்வாடி பகுதியை சேர்ந்தவர் பப்லு கண்ட்டோலியா. அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கும் மனைவி ராஜகுமாரி என்பவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் ராஜ்குமாருக்கு நான்காவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு பிறகு காட்டுக்குள் சென்று ஒரு கல்லின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றார்கள். அதாவது மத்திய பிரதேச அரசு 2011 ஆம் வருடம் மத்திய பிரதேச அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவையடுத்து மூன்றாவதாக குழந்தை பெற்றுக் கொண்டால் அரசு பணியில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கொள்கையின்படி வேலை இழந்து விடுவோம் என்ற பயத்தாலேயே இந்த கொடூர செயலை செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். காலையில் நடை பயிற்சிக்கு சென்ற கிராம மக்கள் குழந்தையின் அழுகுரலை கேட்டு கல்லுக்கிடையில் கிடந்த குழந்தையை கண்டுபிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள்.