அண்ணே போனைப் பாருங்க… நாங்க கிளம்புறோம்… பட்டப்பகலில் கடையை ஏமாற்றி… ரூ 25,000 போனைச் சுட்ட ஜோடி… இணையத்தில் வீடியோ வைரல்…!

By Swetha on கார்த்திகை 2, 2026

Spread the love

லக்னோவில் உள்ள ஹனுமான் மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் ஒரு மொபைல் பழுதுபார்க்கும் கடையில், பட்டப்பகலில் ஒரு வாலிபரும் பெண்மணியும் சேர்ந்து சுமார் ரூ 25,000 மதிப்பிலான மொபைல் போனைத் திருடிச் சென்றுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைக்குள் நுழைந்த அந்த வாலிபர், மேஜை மீது வைக்கப்பட்டிருந்த மொபைல் போனை யாருக்கும் சந்தேக வராதவாறு சாமர்த்தியமாக எடுத்து, அங்கிருந்த பெண்மணியிடம் கொடுத்துள்ளார். போனைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண், நொடிப்பொழுதில் அங்கிருந்து நைஸாக வெளியேறியுள்ளார்.

   

https://twitter.com/madanmohansoni/status/2117138385210868217/video/1

   

இவை அனைத்தும் சில வினாடிகளிலேயே நடந்து முடிந்துவிட்டன. இந்தக் கள்ளத்தனமான திருட்டுச் சம்பவம் முழுவதும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தத் திருட்டில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.