ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு சாலை பாரதி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (28). மளிகைக் கடை மற்றும் போஸ்டர் ஒட்டும் வேலை செய்து வந்த இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சுபுலட்சுமி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டை விட்டு வெளியேறிய சுபுலட்சுமி, கடந்த ஒரு ஆண்டாகப் பிரசாந்தின் வீட்டில் அவருடன் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார். ஏற்கனவே பிரசாந்துக்குத் திருமணமாகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாகப் பிரசாந்த் மற்றும் சுபுலட்சுமி இடையே அடிக்கடி தகராறும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் ஒரு அறையில் சுபுலட்சுமி விஷம் குடித்தும், மற்றொரு அறையில் பிரசாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பிரசாந்தின் தம்பி விஜய் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு இருவரும் சடலமாகக் கிடப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இவர்களின் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்…
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…
வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…
சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…