“கள்ளக்காதலுக்கு இடையூறு”…. கணவனை தீர்த்துக்கட்டிவிட்டு 22 நாளாக ஊர் சுற்றிய கொடூர மனைவி…. இறுதியில் நடந்த பயங்கரம்…. அதிர்ச்சி சம்பவம்….!

By Nanthini on ஐப்பசி 24, 2026

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்த மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரம்பூர் பகுதியைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் சசிகுமாருக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது; லட்சுமிக்கு ஆந்திராவைச் சேர்ந்த பிரபுதேவா என்பவருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக அவர் ஏற்கனவே பலமுறை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கணவன் தடுத்து நிறுத்தியும், இந்தத் தொடர்பு தொடர்ந்ததால் குடும்பத்தில் பதற்றம் நிலவி வந்தது.

கடந்த மாதம் 27-ம் தேதி, நகை அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டு தம்பதியினர் ஆந்திர மாநிலம் குப்பம் அருகே உள்ள கங்குந்தி வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு மது அருந்தியபோது லட்சுமி தனது கள்ளக்காதலன் பிரபுதேவாவை வரவழைத்து, இருவரும் சேர்ந்து சசிகுமாரை பீர் பாட்டிலால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை அதே வனப்பகுதியில் குழிதோண்டிப் புதைத்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

   

கொலைக்குப் பிறகு காவல்துறை பிடியில் சிக்காமல் இருக்க இருவரும் பைக்கிலேயே பெங்களூரு, ஹைதராபாத், திருப்பதி, சென்னை, சேலம் மற்றும் வேலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் சுற்றித் திரிந்துள்ளனர். இவ்வாறாக 22 நாட்கள் ஊர் ஊராகத் தலைமறைவாக வாழ்ந்த இவர்கள், கையில் இருந்த பணம் தீர்ந்தவுடன் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். அப்போது குப்பம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.

   

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கணவரைக் கொலை செய்த உண்மையை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்பத்திற்குத் தொல்லையாக இருந்ததாகக் கூறி கள்ளக்காதலனுடன் சேர்ந்து சொந்தக் கணவனையே படுகொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.