ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தம்பதியினர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ராகேஷ் மற்றும் மம்தா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, தம்பதியினர் இணைந்து ஒரு உருக்கமான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், “எங்களை யாரும் பிரிக்காதீர்கள்; எங்கள் மரணத்திலும் எங்களை ஒன்றுசேர்த்து அடக்கம் செய்யுங்கள்” என்று அழுதுகொண்டே கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர்களின் காதலுக்குக் குடும்பத்தினரிடையே எதிர்ப்பு இருந்ததா அல்லது வேறு ஏதேனும் குடும்பப் பிரச்சினைகள் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களின் தொலைபேசி அழைப்புப் பதிவுகள் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பின்னணி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
