திருவண்ணாமலை மாவட்டம் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரகுமார் (42) மற்றும் அவரது மனைவி சிந்து (38) ஆகிய தம்பதியர், போளூர் அருகே வடமாதிமங்கலம் ரயில் நிலையம் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். ஹரியானாவில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த சந்திரகுமாருக்கு அண்மையில் ஏற்பட்ட கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக வேலை பறிபோனதுடன், வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட கடுமையான மருத்துவச் செலவுகள் எதிர்காலத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் தங்களது மகனைக் கடன் சுமையில் தள்ளிவிடும் என்று அஞ்சி, தம்பதியர் இருவரும் தனிமையில் பேசி உருக்கமாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
