குடும்ப தகராறு.. 3 குழந்தைகளை அனாதையாக தவிக்க விட்டு விட்டு… தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு..!

Spread the love

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நயினார் பேட்டை கிராமத்தில் ஆறுமுகம் (35) மற்றும் ரேவதி (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் ஜனனி என்ற மகளும், வருண் பகவான் (9), வெற்றிவேல் (7) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். ஆறுமுகம் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்படியான நிலையில் நேற்று மகன்கள், மகள் பள்ளிக்கு சென்றபோது உறவினர்கள் சிலர் வீட்டுக்கு வந்தனர். வீடு திறந்து கிடந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த போது ஒரு அறையில் ஒரே சேலையில் ஆறுமுகமும் ரேவதியும் தூக்கில் தொங்கினர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரையும் உறவினர்கள் கீழே இறக்கிய நிலையில் ரேவதி இறந்துவிட்டதும் ஆறுமுகத்திற்கு சற்று உயிர் இருப்பதையும் அறிந்த உறவினர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்களுடைய மூன்று குழந்தைகள் அனாதையாகிவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

23 seconds ago

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

5 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

36 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

47 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

54 minutes ago

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

58 minutes ago