மேற்கு கோதாவரி மாவட்டம் வெல்புருவைச் சேர்ந்த சாய் மற்றும் ஷிரிஷ் தம்பதியினர், தாங்க முடியாத கடன் தொல்லையால் விபரீத முடிவை எடுத்துள்ளனர். ஓட்டுநராகப் பணிபுரிந்த சாய், வாங்கிய கடனை அடைக்க வழியின்றி சில மாதங்களுக்கு முன்பு பீமாவரத்திற்கு குடிபெயர்ந்தார். எனினும், அங்கும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை தொடர்ந்ததால் விரக்தியடைந்த இவர்கள், வியாழக்கிழமை இரவு கோதாவரி ஆற்றின் குறுக்கே உள்ள திண்டி-சின்சினடா பாலத்திற்குச் சென்று, தங்கள் மூன்று வயது மகனை மட்டும் பாலத்தில் தனியாக விட்டுவிட்டு ஆற்றில் குதித்துள்ளனர்.
இந்தத் தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு, ஆண் குழந்தையுடன் ஸ்கூட்டரில் வந்து இந்தத் துயரச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இரவு நேரத்தில் பாலத்தில் வாகனத்துடன் ஆதரவின்றித் தவித்த குழந்தையைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக ஏலமஞ்சிலி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் ஆற்றில் குதித்த தம்பதியினரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…
திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…
வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…