என்ன ஒரு ஆச்சரியம்.. சூரியன் மறையாத நாடுகள் என்னென்ன தெரியுமா..? வியப்பில் ஆழ்த்தும் தகவல்கள்..

By Priya Ram

Updated on:

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பகல் பொழுது 12 மணி நேரம் இரவு பொழுது என ஒதுக்கப்பட்டுள்ளது சில நாடுகளில் பகல் பொழுது அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும் ஆனால் சூரியனே மறையாத நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

நார்வே:
நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு என அழைக்கப்படும் நார்வையில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சுமார் 76 நாட்களுக்கு சூரியன் மறையாது. சுமார் 20 மணி நேரம் ஒரு நாளைக்கு சூரிய வெளிச்சம் இருந்து கொண்டே இருக்குமாம். அதே நாட்டில் இருக்கும் சுவேல் பார்டு என்ற பகுதியில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை ஒரு நிமிடம் கூட மறையாமல் சூரியன் இருந்து கொண்டே இருக்குமாம்.

   

கனடா:
கனடாவில் இருக்கும் நுனாவுட் என்ற இடத்தில் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு சூரியன் மறையவே மறையாதாம். 24 மணி நேரமும் அந்த இடத்தில் இரவு பொழுது வராமல் பகல் பொழுது மட்டுமே இருக்குமாம். ஆனால் பெரும்பாலான பகுதிகள் பனியால் மூடப்பட்டிருக்கும்.

ஐஸ்லாந்து:
கிரேட் பிரிட்டனுக்கு பிறகு ஐரோப்பாவின் மிகப்பெரிய தீவான ஐஸ்லாந்தில் கொசுக்கள் கிடையாது. அந்த நாட்டில் மே மாதம் பத்தாம் தேதி முதல் ஜூலை மாதம் வரை சூரியன் மறையாமல் பகல் பொழுது தான் இருக்கும். அந்த நாட்டு மக்கள் மலை ஏறுதல், வனவிலங்கு பார்த்தல், சைக்கிளிங் போன்ற விஷயங்களை செய்வார்களாம்.

அலாஸ்கா:
அலாஸ்காவில் மே மாத இறுதி முதல் ஜூலை இறுதி வரை சூரியன் மறையாமல் அப்படியே இருக்கும். நவம்பர் தொடக்கத்தில் இருந்து அடுத்த 30 நாட்கள் அந்த பகுதி இருளாக காட்சியளிக்கும் அதனை துருவ இரவு நேரம் என அழைப்பது உண்டு.

பின்லாந்து:
பின்லாந்தில் ஏராளமான தீவுகளும் ஏரிகளும் உள்ளது. ஒரு ஆண்டிற்கு மொத்தம் 73 நாட்கள் மட்டும்தான் அந்த நாட்டில் சூரியன் இருக்கும். மற்ற நாட்களில் சூரிய வெளிச்சமே இருக்காது. இதனால் அங்கு பனி வீடுகள் கட்டப்படுகிறது. கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த நாட்டிற்கு வருகை தருவார்கள்.

ஸ்வீடன்:
மே மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் மாத இறுதிவரை அந்த நாட்டில் நள்ளிரவு தான் சூரியன் மறையும். அதுவரை சூரிய வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும். பின்னர் அதிகாலை 4:30 மணிக்கு எல்லாம் சூரியன் உதயமாகி விடுவதால் அந்த நாட்டு மக்கள் மீன் பிடிப்பது, கோல்ப் விளையாடுவது, தேசிய பூங்காக்களுக்கு செல்வது என நேரத்தை கழிப்பார்களாம்.

author avatar
Priya Ram