Connect with us

மாணவர்களுக்கு தடபுடலாக நடிகர் விஜய் வைத்து விருந்து.. ஒரு வேலைக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவா..?

CINEMA

மாணவர்களுக்கு தடபுடலாக நடிகர் விஜய் வைத்து விருந்து.. ஒரு வேலைக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவா..?

 

விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவ மாணவியர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்ட உணவுகளுக்காக மட்டும் 72 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் விஜய் 2-வது ஆண்டாக நேற்று மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தியிருந்தார். மொத்தம் இரண்டு கட்டங்களாக இருந்த விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டு நிலையில் முதல் விருது வழங்கும் விழா நேற்று சென்னை திருவான்மையூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் காலை முதல் தொடங்கி 10 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற முடிவடைந்தது.

   

அடுத்த கட்ட நிகழ்வு ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது. இதில் மாணவர்களுக்கு விருது வழங்குவதற்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் காலை 10 மணிக்கு மண்டபத்திற்கு வந்த நிலையில் மாணவர்களுடன் அமர்ந்து முதலில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து மேடைக்கு சென்று பேசிய நடிகர் விஜய் மாணவர்களுக்கு பல அறிவுரைகளையும் அரசியல் ரீதியாக சில விஷயங்களையும் பேசியிருந்தார்.

இதைத்தொடர்ந்து மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 9 மாணவர்களுக்கு வைர மோதிரமும் வைர கம்மலையும் நடிகர் விஜய் பரிசாக அளித்து இருந்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 8:30 மணி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் பாதுகாப்பாக அவரது ஊர்களுக்கு வேன்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

மீதமுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் காலை மற்றும் மதியம் இரண்டு வேலையும் மாணவர்கள் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. காலை இட்லி பொங்கல் என உணவு வழங்கப்பட்ட நிலையில் மதியம் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து அந்த நிகழ்ச்சிக்கு சமையல் செய்த சமையல்காரர் கூறியதாவது 3000 பேருக்கு உணவு சமைக்க கூறி இருந்தார்கள். ஆனால் 4000 பேர் சாப்பிடும் அளவுக்கு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. மொத்த செலவு மட்டும் 75 லட்சம் இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். ரசமலாய், இஞ்சி துவையல், அவரைக்காய் பொரியல், உருளைக்கிழங்கு வருவல், கார குழம்பு, சாம்பார், மோர், தயிர் பச்சடி என தயார் செய்யப்பட்டது என்று கூறியிருந்தார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top