இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.75,000 கிடையாது… தமிழக அரசு வெளியிட்ட அவசர அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 18, 2026

Spread the love

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி சலுகையை முழுமையாகப் பெறுவதற்கான முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, தகுதியுள்ள விவசாயிகள் வரும் 30.11.2026-க்குள் தங்களது எஞ்சிய கடன் தொகையைச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் தவணை முதிர்வடையும் பயிர்க்கடன்களுக்கு உரிய நிலுவைத் தொகையை விவசாயிகள் உரிய நேரத்தில் செலுத்திவிட்டால், அரசால் அறிவிக்கப்பட்ட தள்ளுபடித் தொகை பின்னர் அவர்களது கணக்கில் விடுவிக்கப்படும்.

மேலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, இந்தப் பயிர்க்கடனுக்கான வட்டித் தொகையையும் தமிழக அரசே முழுமையாக ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல், பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் அனைவரும் தங்களது பகுதிக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உடனடியாக அணுகி, உரிய நிலுவைத் தொகையைச் செலுத்தி இத்திட்டத்தின் முழுப் பலனையும் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.