ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை தொடங்கியதும் மதிப்பீட்டாளராக வேலை பார்த்த ரமேஷ் குமார்(45) தலைமறைவானார். நேற்று தலைமறைவான ரமேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். இதனை அறிந்ததும் வங்கி மேலாளரான கதிரவன்(55) என்பவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது போலீசார் வங்கி மேலாளர் கதிரவனின் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது அவருக்கு நெஞ்சுவலி இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக கதிரவன் நாடகமாடியது தெரியவந்தது. இதனால் கதிரவனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் செந்தில்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கதிரவன், ரமேஷ் குமார் இருவரும் கையாடல் செய்த 8. 25 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குஜராத்தின் அகமதாபாத்தில் புதன்கிழமை, அக்டோபர் 29 அன்று, மூன்று வயது சிறுமி மீது கார் மோதிய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று ஊரை அடித்து உலையில்…
மெலிசா என்று பெயரிடப்பட்ட புயலானது கரீபியன் நாடுகளில் தாக்கி வருகிறது. ஹைதி, மைக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த புயலால் பாதிப்புகளை…
தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் மற்றும்…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
தமிழக அரசானது மாணவ மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில்…