தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் குறைந்த வட்டி விகித நகைக்கடன்கள், குறிப்பாக விவசாயிகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி, 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது மீண்டும் ஒரு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசு மீண்டும் ஒரு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பலமாக எழுந்துள்ளது.
இந்நிலையில் 2021 போலவே 2026 தேர்தலிலும் பெண்களின் வாக்குகளை குறிவைத்தே திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கிறது. இதை தான் கனிமொழி ‘திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கலாம் என குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டுறவு சங்க நகைக்கடன் (3 சவரன்) தள்ளுபடி அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
