நீங்க என்ன டாக்டரா?… “ஒரு பெண்ணோட வலி தெரியுமா?”… ஜூலி விவகாரத்தில் பொங்கி எழுந்த கூல் சுரேஷ்… இணையத்தில் புயல்…!!

By Gayathri on ஐப்பசி 25, 2026

Spread the love

பிக் பாஸ் புகழ் ஜூலி தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலில், அவரது கர்ப்ப காலத்தை தவறாக கணக்கிட்டு சமூக வலைதளங்களில் அவதூறுகளும் விமர்சனங்களும் பரப்பப்பட்டு வருகின்றன. முன்னதாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், முந்தைய கருச்சிதைவு வேதனை குறித்தும் தேவையற்ற கேள்விகள் எழுப்பியவர்களுக்கு ஜூலி தனது வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜூலிக்கு ஆதரவாகவும் விமர்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் நடிகர் கூல் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண்ணின் மன உளைச்சலையும் தாய்மையின் வழியையும் மற்றவர்கள் உணர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மருத்துவர் போல அவதூறுகளைக் கிளப்பும் நபர்களைக் கடுமையாகச் சாடினார்.

   

மேலும், ஒரு பெண்ணின் அந்தரங்க உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்காமல் தரம் தாழ்ந்து பேசுவோரைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்களை இழிவுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதை விடுத்து, சக மனிதர்களாக அவர்களின் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் பிரதானக் கருத்தாக அமைந்துள்ளது.