Connect with us

சொந்தமாக பிசினஸ் செய்யும் ‘குக் வித் கோமாளி’ காளையன்…  என்ன பிசினசுன்னு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க… 

CINEMA

சொந்தமாக பிசினஸ் செய்யும் ‘குக் வித் கோமாளி’ காளையன்…  என்ன பிசினசுன்னு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க… 

 

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பேராதரவை பெற்றது. சமீபத்தில் சீசன் 4 நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் காளையன். இவர் சுல்தான், ஜிகர்தண்டா என பல திரைப்படங்களில் நடித்து அசத்தியவர்.

   

தற்பொழுது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் காளையன் கோமாளிகளான புகழ், ஜி பி முத்து, குரேஷி போன்றவர்களை அடித்து உதைத்து செய்யும் காமெடிக்கென்றே ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளனர்.

படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் காளையன் சொந்தமாக வேறொரு தொழிலில் கவனம் செலுத்தி வருகிறாராம். அவர் முறுக்கு உள்ளிட்ட ஸ்னாக்ஸ் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறாராம்.

அதில் மொத்தம் 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்களாம். அவரது நிறுவனத்தின் முறுக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்கு செல்வதாகவும் கூறி இருக்கிறார். பிரபல சேனல் ஒன்று அவரிடம் பேட்டி எடுத்த இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)

 

Continue Reading
To Top