Connect with us

CINEMA

நான் கவர்ச்சி நடிகைன்னு Honeymoon-ல தான் என் கணவருக்கு தெரியும்.. அந்த நபரால் மாட்டிக்கிட்டேன்.. உண்மையை போட்டு உடைத்த CWC விசித்திரா..

நடிகை விசித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். கடந்த 1991-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் விசித்ரா நுழைந்தார். இவர் மாமி சின்ன மாமி, வாழ்க்கை, ராசாத்தி, ஆனந்தி, கல்யாணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இப்போதும் விசித்திரா சின்னத்திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

இந்நிலையில் குக் வித் கோமாளி நான்காவது சீசனில் கலந்து கொண்ட விசித்ரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது விசித்ரா திருமணம் செய்து பூனேவில் செட்டில் ஆனார். இந்நிலையில் சமீபத்தில் விசித்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது, திருமணத்திற்கு முன்பு வரை நான் ஒரு கிளாமர் நடிகைன்னு எனது கணவருக்கு தெரியாது.

திருமணம் முடிந்த நாங்கள் கொடைக்கானலுக்கு ஹனிமூன் சென்றோம். நாங்கள் காரில் அமர்ந்திருந்த போது திடீரென ஓடி வந்த ஒருவர் கை கொடுப்பதற்காக காருக்குள் கையை நீட்டினார். அதனை பார்த்ததும் எனது கணவர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு தான் அவருக்கு நான் ஒரு கிளாமர் நடிகை என்பது தெரியும். எது எப்படி இருந்தாலும் அந்த நபர் அனுமதி இல்லாமல் அப்படி காருக்குள் கை நீட்டியதால் எனது கணவர் கோபமடைந்தார் என்ன கூறினார்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top