மணிமேகலை போன கையோடு புது ஆங்கரை களம் இறக்கும் விஜய் டிவி… வெளியான அப்டேட்..!!

By admin on புரட்டாதி 23, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். இப்போது சோசியல் மீடியாவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பற்றி தான் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

   

ஏனென்றால் பிரபல தொகுப்பாளணியான மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார். அதற்கு பிரியங்கா தான் காரணம் என தெரிகிறது. குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்காவும் ஒரு போட்டியாளராக பங்கேற்று உள்ளார். அவர் போட்டியாளராக வந்ததை மறந்து விட்டு தொகுப்பாளர் வேளையில் தலையிடுவதால் தனது சுயமரியாதையை கருத்தில் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக மணிமேகலை அறிவித்தார்.

   

 

பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு பற்றி பலரும் சோசியல் மீடியாவில் பேசி வந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் கூட தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் விஜய் டிவி மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் அவருக்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அடுத்த ஆங்கரை தேர்வு செய்துள்ளது.

Manimegalai

இதற்கான ப்ரோமோ வெளியானது. அந்த புரோமோவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த ஆங்கர் யார் தெரியுமா? அது உங்களுக்கு பிடித்தவராக கூட இருக்கலாம்? உங்களுக்கு தெரிந்தவராக கூட இருக்கலாம். நீங்கள் நினைக்கும் நபராகவும் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.