விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் விலகினார். அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தங்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் வேலையில் மணிமேகலையும் அவரின் கணவரும் பிசியாக உள்ளனர். இருந்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மணிமேகலை அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அந்தவகையில் சமீபத்தில் இவர் அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்பொழுது இவர் அமெரிக்காவில் தனது கணவரின் உருவத்தை சிலையாக செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் ‘அமெரிக்கா போனாலும், ஆண்டிப்பட்டி போனாலும் உன்னை டார்ச்சர் செய்து கொண்டு தான் இருப்பேன்’ என்றும் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது இவர் வெளியிட்ட இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ…
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…