சினிமா அளவுக்கு தொலைகாட்சி சீரியல்கள், நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். அந்த வகையில் பிக்பாஸை விட மிகவும் பிரபலமடைந்த ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 3 சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது 4ஆவது சீசன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் யாராவது எலிமினேட் ஆனால் மட்டுமே ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்படும். மற்றபடி இந்த நிகழ்ச்சி எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்போ, வேதனையோ ஏற்படாது.
இந்த 4ஆவது சீசன் கடந்த மாதம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கியது. தற்பொழுது இந்நிகழ்ச்சி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களிலும் கோமாளியாக கலக்கி வந்தார் மணிமேகலை. ஆனால் திடீரென இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதற்கு என்ன காரணம் என இதுவரை கூறவில்லை. இருப்பினும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகித்துக் கொண்டுதான் வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மணிமேகலை. இவர் தற்பொழுது தனது அம்மா, பாட்டி, தானும் நின்று ‘எங்கள் குடும்பத்தின் மூன்று தலைமுறை பெண்கள்’ என்ற கேப்ஷனில் ஒரு அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்….

