பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். தற்போது தென்னிந்தியாவில் எல்லாம் மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்ட வந்தாலும் இதற்கு அஸ்திவாரம் போட்டது என்றால் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி தான். தமிழ் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கி அதே வாரத்தில் தான் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18-ம் தொடங்கப்பட்டது. இருந்த சீசனில் முதல் முறையாக தென்னிந்தியாவிலிருந்து நடிகை ஸ்ருதிகா வீட்டிற்குள் நுழைந்தார் .
தன்னுடைய நடிப்பில் இதுவரை நான்கு திரைப்படங்கள் வந்திருப்பதாகவும் அத்தனையும் பக்கா பிளாப் எனவும் அவர் பேசிய முதல் நாளிலிருந்து ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கினார் என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய கள்ளம் கபடம் இல்லாத சேட்டையால் ரசிகர்களை கவர்ந்தார்.
இதன் காரணமாக ஹிந்தி தெரியாதவர்கள் கூட ஹிந்தி பிக் பாஸ் பார்க்கத் தொடங்கினார்கள். தேவையான நேரத்தில் கோவப்பட்டு மற்ற நேரத்தில் சேட்டை செய்து பலரை கவர்ந்தார். குடும்பங்கள் வீட்டிற்குள் வந்த டாஸ்கில் கணவர் உள்ளே வந்து இருவரும் சந்திக்க தருணமும் வைரலாகி வந்தது. 90 நாட்களைக் கடந்து ஸ்ருதிகா அர்ஜுன் பலமான போட்டியாளராக விளையாடி வந்தார். அடுத்த வாரம் ஃபைனல் இருக்கும் நிலையில் இந்த வாரம் மூவர் மட்டுமே நாமினேஷனில் இருந்தார்கள்.
அதில் ஸ்ருதிஹாவும் இருந்தார். அவரோடு இருந்த மற்ற பிரபலங்கள் ஹிந்தியின் பிரபலம் என்பதால் இது ஸ்ருதிஹாவிற்கு கடுமையான நாமினேஷன் ஆகவே இருந்தது. தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் தொடர்ச்சியாக ஸ்ருதிஹாவுக்கு வாக்கு கேட்டு வீடியோ வெளியிட்டு வந்தார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக வெற்றி கமிஷனரில் மக்களின் வாக்கு அடிப்படையில் சித்திக்கா வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இருப்பினும் பெரிய பிரபலமாக இல்லாமல் தோல்வி நடிகையாக இருந்தாலும் தன்னுடைய டிவி புகழை மட்டுமே வைத்துக் கொண்டு உள்ளே சென்ற இவர் 90 நாட்கள் தன்னுடைய ஆதிக்கத்தால் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தான் வெளியேறி இருக்கிறார் என்று அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…