குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு… விஜய் டிவி எடுக்கப்போகும் முடிவால் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By Soundarya on மார்கழி 26, 2024

Spread the love

2019 ஆம் வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கோமாளி நிகழ்ச்சி. தற்போது ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதன் முதல் நான்கு சீசனில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் நடுவராகவும் இருந்த நிலையில் மீடியா மேசன்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால் கடந்த வருடம் விஜய் டிவிக்கும் மீடியா மேசன்ஸ் நிறுவனத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது. இதன் காரணமாக நிகழ்ச்சியின் தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகினார்கள்.

   

இதனால் புது டீமோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஐந்தாவது சீசனை நடத்தியது. இதனையடுத்து விஜய் டிவி இலிருந்து விலகிய வெங்கடேஷ் பட்டிருக்கு பதிலாக மாதம் பட்டி ரங்கராஜன் களமிறக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆனார்.

   

 

அதேபோல விஜய் டிவியில் இருந்து விலகி மீடியா மேசன் சார்பாக சன் டிவியோடு கைகோர்த்து டாப்பு குக்கு தோப்பு குக்கு என்ற குக்கிங் நிகழ்ச்சி நடத்தி வெற்றிக் கண்டது. இந்த நிகழ்ச்சிக்கு வெங்கடேஷ் பட் நடுவராக களமிறங்கினார். இந்நிலையில் மீடியா மேசன்ஸ் நிறுவனமே விலகிய நிலையில் அந்த நிறுவனம் வைத்த பெயரை வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்டுடுகிறது.

அதாவது அடுத்த சீசன் முதல் அந்த நிகழ்ச்சியின் பெயர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அந்த நிகழ்ச்சிக்கு பெயர் வைத்த மீடியா மேஷம் நிறுவனம் விலகி விட்டதால் அதே பெயரோடு பயணிக்க விஜய் டிவி தரப்பு விரும்பவில்லை. இதனால் பெயரை மாற்றி புது பெயரோடு அந்த நிகழ்ச்சி நடத்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.