இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, ஜெர்மனியைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலம் லிஸ்லாஸின் இன்ஸ்டாகிராம் பதிவை ‘லைக்’ செய்தது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கோலி அந்தப் பதிவிற்கு விருப்பம் தெரிவித்த சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் அதைக் கவனித்து வைரலாக்கினர். இதனால் ஏற்பட்ட கேலி மற்றும் கிண்டல்கள் காரணமாக அவர் உடனடியாக அந்த ‘லைக்கை’ நீக்கினார். தனது ஆதர்ச நாயகன் இப்படிச் சங்கடத்திற்கு உள்ளானதை எண்ணி தான் வருத்தப்படுவதாக லிஸ்லாஸ் தனது சமீபத்திய பேட்டியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
உளவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ள லிஸ்லாஸ், இந்திய கலாச்சாரம் மற்றும் பயணங்கள் குறித்த வீடியோக்கள் மூலம் இந்திய ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். கோலியின் ஆதரவை தான் பெருமையாகக் கருதுவதாகவும், ஒரு சிறிய விஷயம் இவ்வளவு பெரிய செய்தியாக மாறும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கோலி தரப்பிலிருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் வராத நிலையில், ஒரு சாதாரண சமூக வலைதளப் பகிர்வு இவ்வளவு சர்ச்சையானது விளையாட்டு மற்றும் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
