சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சந்தானம் கலந்து கொண்டார். அப்போது ஜெயிலர் 2ம் பாகம் படத்தில் சந்தானம் நடிப்பதாக தகவல் வெளியானது குறித்து அங்கிருந்த செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். ஜெயிலர் 2 படத்தில் நீங்கள் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த நடிகர் சந்தானம், அது என்ன கள்ளக்காதலா? மறைத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் செய்வதற்கு? எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டு தான் செய்வேன் என பதில் அளித்தார். அவர் அளித்துள்ள இந்த பதிலால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறேன் அல்லது நடிக்கவில்லை என்று பதில் சொல்லாமல் இது என்ன கள்ளக்காதலா என்று அவர் செய்தியாளர்களை திருப்பி கேள்வி கேட்டது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது
