விஜயின் கட்சிப் பெயரிலேயே இப்படி ஒரு தப்பு இருக்கா..? அதுவும் வேணும்னே செஞ்சிருக்காங்களா..? வெளியான ஷாக்கிங் தகவல்..

By Sumathi

Updated on:

நடிகர் விஜய் நேற்று தனது கட்சி பெயரை அறிவித்து, அரசியல் கட்சி துவங்க இருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். அதாவது தமிழக வெற்றி கழகம் என்பதுதான் விஜயின் கட்சி பெயர்.

இந்த பெயரை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்த விஜய், இனி முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும், இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு நடிப்பை விட்டு விலகுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

   

Tamil actor Vijay announces his political party, Tamizhaga Vetri Kazhagam - The Hindu

இந்நிலையில், விஜய் அறிவித்துள்ள தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில், வெற்றி – கழகம், இடையில் வரவேண்டிய ‘க்’ என்ற எழுத்து வரவில்லையே என தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், தமிழ்நாடு என்பதுதான் சரியான பெயர், தமிழகம் என்ற வார்த்தை பொருத்தம் இல்லாதது என்பதும் பெரும் சர்ச்சையாக நீடித்து வருகிறது. தமிழ்நாடு என்றுதான் சொல்ல வேண்டும் என்ற நிலையில், தமிழக வெற்றி கழகம் என்பதில் க் இல்லாதது, தமிழ்நாடு என்பதற்கு தமிழக என்பதும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

 

இதுகுறித்து சீனியர் சினிமா பத்திரிகையாளர், வலைப்பேச்சு அந்தணன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், பல ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவை இணைந்து, சன் டிவிக்கு பதிலாக தமிழ் சினிமாத்துறை பயனடையும் விதமாக, தமிழ்திரை என்ற புதிய டிவியை ஆரம்பித்தனர். ஆனால் தமிழ்த்திரை என இல்லாமல், தமிழ்திரை என ‘த்’ ஐ விட்டு விட்டனர்.

தமிழ் சினிமா துறையில் புள்ளி வைத்த இணைப்பு எழுத்துகள் வந்தால் படம் வெற்றி பெறாது என்ற மூட நம்பிக்கை உள்ளது. இதுபற்றி அப்போதே துக்க வீடு ஒன்றில், மன்சூர் அலிகான், இயக்குநர் செல்வமணியிடம் தமிழ் திரை என பெயரிட்டுள்ளீர்களே, நடுவில் த் வரவில்லையே என கேட்டிருக்கிறார். அதற்கு செல்வமணி, முதலில் தமிழ்திரையே வருமான்னு தெரியலையே என்று கூறியிருக்கிறார். அப்படித்தான் விஜய் ஆரம்பித்த கட்சியின் நிலையும் என்று கிண்டலாக கூறியிருக்கிறார் அந்தணன்.

author avatar
Sumathi