அண்டை நாட்டின் புதிய சதியா?… இது சாதாரண புறா இல்ல… பாகிஸ்தான் உளவாளி… பறந்து வந்த புறா தூக்கியெறிந்த திடுக்கிடும் தகவல்…!!

By Gayathri on ஆவணி 31, 2026

Spread the love

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பறந்துவந்த புறா ஒன்றை உள்ளூர் விவசாயி ஒருவர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அந்தப் புறாவின் காலில் பொருத்தப்பட்டிருந்த சிறிய வளையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொடர்பு எண் ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதுவா மாவட்டம் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இந்த விவகாரத்தை மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகின்றனர். அண்டை நாட்டிலிருந்து ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காகவோ அல்லது உளவு பார்க்கும் நோக்கத்திற்காகவோ இந்தப் புறா பயிற்றுவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.