தவெக vs தனுஷ் ரசிகர்கள்… “தனுஷ்கிட்ட கட்சியா இருக்கு?”… நேர்காணலில் எல்லை மீறிய நாஞ்சில் சம்பத்?… வைரலாகும் சர்ச்சை வீடியோ…!!

By Gayathri on ஐப்பசி 14, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், சமீபத்தில் பங்கேற்ற தனியார் நேர்காணல் ஒன்றில் நடிகர் தனுஷ் குறித்து தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அந்த நேர்காணலின் போது நெறியாளர், “நீங்கள் அடுத்ததாக நடிகர் தனுஷின் கட்சியில் இணையப் போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த நாஞ்சில் சம்பத், தனக்கே உரிய நக்கல் பாணியில் அவரிடம் கட்சி இல்லை, குச்சிதான் உள்ளது என்ற ரீதியில் இரட்டை அர்த்தத்தில் கேலி செய்து பேசியுள்ளார். இலக்கிய நடையில் பேசக்கூடிய ஒரு மூத்த அரசியல் பிரமுகர், முன்னணி நடிகர் ஒருவரை பொதுவெளியில் இவ்வாறு அவமதிக்கும் தொனியில் பேசியது பேசுபொருளானது.

   

இதற்கு நடிகர் தனுஷின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி தனிப்பட்ட நபரின் உடலமைப்பைக் கிண்டல் செய்யும் வகையிலும், மட்டமான முறையிலும் பேசுவது ஏற்கத்தக்கதல்ல என்று அவர்கள் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.