தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மொத்தம் 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண்களையும் 117 தொகுதிகளில் பெண்களையும் களம் இறக்க உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். மேலும் 234 வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தும் மாநாடு வருகின்ற பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெறும் எனவும் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டம் இதிச் சுமையை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் வரும்போது இதை அறிவித்திருப்பதால் இது ஒரு வாக்கு அறுவடை தான். இருந்தாலும் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி.
ஆட்சியில் பங்கு என்பதை விஜய் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கின்றார். காரைக்குடி தொகுதியில் நான் நிற்பது குறித்து பிப்ரவரி 21ஆம் தேதி அறிவிப்பேன். அந்த நாளில் திருச்சியில் நடக்கும் மாநாட்டில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்போம். கூட்டணி என்பது எங்களுடைய கொள்கை கிடையாது. கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பது பொய். ஜெயலலிதா மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளனர். மாற்றம் என்பது ஒரே நாளில் வந்து விடாது என சீமான் தெரிவித்துள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…