டெம்போ மீது பயங்கரமாக மோதிய கன்டெய்னர் லாரி… தடுப்புகளை உடைத்து 35 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனங்கள்… துடிதுடித்து பலியான ஓட்டுனர்… பெரும் பரபரப்பு சம்பவம்..!!

By Devi Ramu on புரட்டாதி 29, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட மும்பை – புனே எக்ஸ்பிரஸ்வே அதிவேக நெடுஞ்சாலையில், திங்கள்கிழமை காலை நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரச் சாலை விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. மும்பை நோக்கி அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த டெம்போ வாகனத்தின் மீது கொடூரமாக மோதியுள்ளது.

இந்த பயங்கர மோதலின் வீரியத்தில் கட்டுப்பாட்டை இழந்த இரண்டு வாகனங்களும், சாலையின் இடதுபுறம் இருந்த இரும்பு மெட்டல் தடுப்புகளை உடைத்துக் கொண்டு அருகில் இருந்த 35 அடி ஆழமான பள்ளத்தில் பாய்ந்து விழுந்தன. இக்கோர விபத்தில் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான முகமது கைஃப் முகமது ஆலம் என்பவர் கைகள் மற்றும் கால்களில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

அதேவேளையில், டெம்போ வாகனத்தை ஓட்டி வந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 29 வயதான மிதேஷ் சிராஜுதீன் ஷேக் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கோபோலி போலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பள்ளத்தில் கிடந்த உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலிஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.