#image_title
சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்துள்ளார். மேலும் சுகன்யா, கவுண்டமணி, செந்தில், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
\இந்த படத்தை ஏ.எம் ரத்தினம் தயாரித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி மக்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. தமிழை போல ஹிந்தியிலும் இந்தியன் படத்தை ரிலீஸ் செய்தனர். ஆனால் அந்த படத்திற்கு ஹிந்துஸ்தானி என பெயர் வைத்தனர். முதலில் ஹிந்தியிலும் இந்தியன் என்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர்.
ஆனால் இந்தியன் என்ற பெயரில் ஹிந்தி நடிகர் சன்னி தியோல் வேறு ஒரு படத்தை நடித்துக் கொண்டிருந்தார். அவர் டைட்டிலை விட்டு தர மாட்டேன் என பிடிவாதமாக கூறிவிட்டாராம். இதனால் ஹிந்தியில் ஹிந்துஸ்தானி என்ற பெயரில் படத்தை ரிலீஸ் செய்தனர். இந்தியன் பணத்திற்கும் விஜயகாந்த்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நாம் யோசிக்கலாம்.
ஹிந்தி நடிகர் சன்னிதியோல் தமிழில் விஜயகாந்த் நடித்த வல்லரசு என்ற படத்தின் ரீமேக்கில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அந்த படத்திற்கு தான் இந்தியன் என பெயர் வைத்துள்ளனர். இதனால் அந்த டைட்டிலை விட்டு தர மாட்டேன் என சன்னி கூறிவிட்டார். அதன் பிறகு தமிழில் வெளியான இந்தியன் திரைப்படத்தை ஹிந்தியில் ஹிந்துஸ்தானி என்ற பெயரில் ரிலீஸ் செய்துள்ளனர்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவளிப்பது குறித்து எடப்பாடி…
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…