தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பத்தாண்டுகாலமாக நீடித்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதோ என்ற ஐயம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திமுகவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்ப்பதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது, திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்பதில் காட்டி வரும் தாமதம் தான். தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு குழு அமைக்கப்பட்டால், தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகக் குறைந்த காலமே இருக்கும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் கவலையாக உள்ளது. திமுக வேண்டுமென்றே நேரத்தை இழுத்தடிப்பதாகவும், இதன் மூலம் கடைசி நேரத்தில் தங்களுக்கு நெருக்கடி கொடுத்து, அவர்கள் ஒதுக்கும் தொகுதிகளை வேறு வழியின்றி ஏற்கச் செய்யும் ‘டெக்னிக்’ ஒன்றை கையாளுவதாகவும் காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், பீகார் போன்ற மாநிலங்களில் கடைசி நேரப் பேச்சுவார்த்தையால் ஏற்பட்ட பின்னடைவுகளைச் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளனர். “நாங்கள் பிரச்சாரத்திற்குத் தயாராக இருக்கிறோம், ராகுல் காந்தியும் வரத் தயாராக இருக்கிறார், ஆனால் திமுக தயாராக உள்ளதா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் கூட்டணி உறுதியானால் மட்டுமே தொண்டர்களை ஒருங்கிணைத்து முழுவீச்சில் களப்பணியாற்ற முடியும் என்று காங்கிரஸ் தலைமை கருதுகிறது.
தற்போது இந்த விவகாரம் திமுக மேலிடத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது. ராகுல் காந்தியுடன் நடத்திய ஆலோசனையின் விபரங்களை முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் விளக்க உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்து குழப்பங்களைத் தீர்க்க வேண்டும் என்பதே காங்கிரஸின் தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது. இந்த மோதல் சுமூகமாகத் தீர்க்கப்படுமா அல்லது தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…