அடுத்த டிவிஸ்ட்… 75 சீட்+ அமைச்சரவை இடம்+ 5 ராஜ்ய சபா சீட்… திமுகவிடம் கறார் காட்டும் காங்கிரஸ்… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் புதிய பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக காங்கிரஸ் திமுகவிடம் மிகப்பெரிய கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் அமைத்த ஐந்து பேர் கொண்ட குழு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியது. இந்தக் குழுவை வழிநடத்தும் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ராகுல் காந்தியின் நெருங்கிய நம்பிக்கை நபர் என்பதால் அவருடைய இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக கவனம் பெற்றது. 2026 தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியான.

இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் திமுகவிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அதாவது 75 சட்டமன்ற தொகுதிகள், 40 தொகுதிகளுடன் அமைச்சரவை பதவிகள், 30 தொகுதிகளுடன் 5 மாநிலங்களாக இடங்கள் என மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளது திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர்கள் எந்த பார்முலாவையும் இயக்கும் மனநிலையில் இல்லை என்றும் தகவல் கசிந்துள்ளது. 75 தொகுதிகள் வழங்குவது கூட்டணியின் சமநிலையை முற்றிலும் மாற்றிவிடும் எனவும் காங்கிரஸ் ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்றும் திமுகவில் பலரும் கூறி வருகிறார்கள்.

   

அதிக இடம் கொடுத்தால் திமுக தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு குறைவுதான். 75 இடங்களை வாங்கி 60 இடங்களை வெற்றி பெற்றால் அதிமுக குறைவாக வென்றால் கூட காங்கிரஸ் முதன்மை எதிர்கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் தமிழக வெற்றி கழகம் கட்சியை ஒரு பூச்சாண்டி போல பயன்படுத்தி பேச்சுவார்த்தையில் தங்களை பலப்படுத்தும் முயற்சியில் இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தல் நெருங்குவதால் அடுத்த சில வாரங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் பேச்சு வார்த்தைகள் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.