BREAKING: கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்?… அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு….!

By Nanthini on பங்குனி 3, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி கோரும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய திமுக தலைமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று நடைபெறவுள்ள இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறும்பட்சத்தில், காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா இடங்களில் தேமுதிகவிற்கு ஒரு இடத்தை வழங்கவும், மீதமுள்ள மூன்று இடங்களில் திமுக நேரடியாகப் போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை இன்று மாலையே திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக தேர்தல் களம் தற்போது கூடுதல் சூடுபிடித்துள்ளது.