திமுகவுக்கு டாட்டா காட்டிய காங்கிரஸ்… விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ பலித்ததா?… ஆளுங்கட்சிக்கு நெருக்கடியா?… அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நிலவி வரும் அரசியல் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான பல ஆண்டுகால கூட்டணியில் தற்போது பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறியால் அதிருப்தியடைந்துள்ள காங்கிரஸ், ஆளுங்கட்சிக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளது.

இது குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி ரகசியப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸின் இந்தத் திடீர் நகர்வு தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால், அக்கட்சிக்கு சுமார் 60 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மேலும் காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியும், விஜய்யின் இளரத்தமும் ஒன்றிணையும் பட்சத்தில், அது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் கடும் சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். திராவிட அரசியலுக்கு மாற்றாக ஒரு வலிமையான மூன்றாவது அணி உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், 2026 தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்த ‘பிளான் பி’ வியூகம் இறுதியானால், அது தமிழகத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைக்கக் கூடும்.

Rajeshwari

Share
Published by
Rajeshwari

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

8 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

9 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

9 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

10 மணத்தியாலங்கள் ago