மார்ச் 1-ஆம் தேதி முதல் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. குறிப்பாக, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் நாளில் மாற்றியமைக்க உள்ளன கடந்த மாதம் வணிக சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில், இந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பாக, முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளைப் பெறப் பயன்படும் ‘யுடிஎஸ்’ செயலி மார்ச் 1 முதல் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய ‘ரயில் ஒன்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நிதி சார்ந்த நடைமுறைகளிலும் புரட்சிகரமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஊழியர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் இனி தங்கள் பிஎஃப் பணத்தை நேரடியாக ஏடிஎம் மையங்கள் மற்றும் யுபிஐ செயலிகள் மூலமாகவே எடுத்துக்கொள்ளும் வசதி மார்ச் முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இது அவசரத் தேவைகளுக்காகக் காத்திருக்காமல் எளிதில் பணத்தைப் பெற உதவும். இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் மக்களின் பொருளாதார மற்றும் பயணத் தேவைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் இவை குறித்து விழிப்புடன் இருப்பது அவசியமாகும்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…