முதுகில் சவாரி செய்துவிட்டு, முதுகிலே குத்திவிட்டார்கள்..! காங்கிரஸை இனி சேர்க்கவே கூடாது.. அண்ணா அறிவாலயத்தில் கொதித்த உதயநிதி ஸ்டாலின்..!

Spread the love

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு திமுகவினரின் உழைப்பே காரணம் என்று குறிப்பிட்டார். ஆனால், பதவி ஆசைக்காக திமுகவிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்ற காங்கிரஸ் கட்சி, திமுக தலைவரைச் சந்தித்து நன்றிகூட தெரிவிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

திமுகவின் முதுகில் சவாரி செய்துவிட்டு, தற்போது முதுகில் குத்திவிட்டுச் சென்றுள்ள காங்கிரஸ் கட்சியை இனி எந்தக் காலத்திலும் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு காங்கிரஸின் இத்தகைய செயல்பாடுகளே காரணம் என்பது இப்போதுதான் புரிகிறது என்றும், சுயநலமாக நடந்துகொண்ட காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றும் அவர் சாடினார்.

தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய அவர், தேர்தலில் நாம் தோல்வியடைந்திருந்தாலும் திமுகவின் மதிப்பு பல மடங்கு கூடியுள்ளது என்றும், தமிழகத்தில் ‘ரிசார்ட் கலாச்சாரம்’ இல்லாத ஒரே இயக்கம் திமுகதான் என்றும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இளைய தலைமுறையினருக்குப் புரியும் வகையில் திமுகவின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், இளைஞரணியினர் அனைவரும் சமூக ஊடகங்களில் இன்ஃபுளுயன்சர்களாக (Influencers) மாற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Swetha

Recent Posts

“நல்லா அழுங்க.. உங்க சாயம் வெளுத்துடுச்சு!”.. திமுகவை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக)…

23 minutes ago

திமுக – அதிமுகவுக்கு ஒரே நேரத்தில் செக் வைத்த ED!.. 22 மாஜி அமைச்சர்கள்.. சொத்து டூ ஊழல்.. மொத்தமாக லாக் ஆன கழகங்கள்.. கசிந்தது ரகசிய லிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி…

33 minutes ago

“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…

41 minutes ago

வீட்டு வாசலில் காத்திருந்த மரணம்.. 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்.. ஸ்கார்பியோ கார் ஏற்றி படுகொலை.. பின்னணியில் உள்ள ‘அந்த’ விவகாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…

53 minutes ago

சுற்றுச்சூழல் துறையா..? சுற்றுலாத்துறையா..? தனக்கே என்ன துறைன்னு தெரியலையா..? செய்தியாளர் சந்திப்பில் சொதப்பிய TVK அமைச்சர்..!

தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…

1 மணத்தியாலம் ago

“2 மணி நேர இருள்.. அலறிய ICU நோயாளிகள்..! அதிரடி உத்தரவிட்ட மின்வாரியம்…!”

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.…

1 மணத்தியாலம் ago