பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு…. உடுப்பியை உலுக்கிய காங்கிரஸ் தலைவரின் படுகொலை… நடுநடுங்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ….!

By Nanthini on ஆவணி 8, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் படுபித்ரி பகுதியில், உள்ளூர் காங்கிரஸ் தலைவரும் ஒப்பந்ததாரருமான டேவிட் டிசோசா வெள்ளிக்கிழமை மதியம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். முடரங்காடி கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவரான இவர், மதுபானக் கூடம் மற்றும் பொதுப் போக்குவரத்து தொழில்களையும் நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரண்டு நபர்கள் வாகனத்தில் வந்து டேவிட்டை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவரை, மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

https://twitter.com/path2shah/status/2085753996132954284?s=20

   

கடந்த காலத்தில் உள்ளூர் தேவாலய உதவிப் பாதிரியார் ரெவ் பிராட்ஃபோர்ட் மகேஷ் என்பவரின் தற்கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, டேவிட் டிசோசா சிறைத்தண்டனை அனுபவித்து திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இக்கொலை தொடர்பாகப் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்பதைக் கண்டறிய, தனிப்பட்ட பகை மற்றும் தொழில்முறை மோதல்கள் எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறை குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.