“விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்… கடுப்பான திமுக” – ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை அதிரடியாக புறக்கணித்த ஸ்டாலின்..!!

By Swetha on ஆனி 4, 2026

Spread the love

நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சி ஜூன் 8ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் நடைபெறவிருந்த இந்த முக்கியக் கூட்டத்தில், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்குகளுக்கு எதிராகக் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து அடுத்தகட்டப் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ள இந்த ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழக அரசியல் களத்தில் நீண்ட காலமாகக் கைகோர்த்துச் செயல்பட்டு வரும் திமுக, காங்கிரஸ் இடையேயான இந்த திடீர் விரிசல் மற்றும் திமுகவின் புறக்கணிப்பு முடிவு, தேசிய அளவிலும் மாநில அளவிலும் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துக் கொண்டதுதான் திமுகவின் இந்த அதிருப்திக்குக் முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. காங்கிரஸின் இந்த அரசியல் நகர்வு திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியதாகவும், அதன் எதிரொலியாகவே காங்கிரஸ் நடத்தும் கூட்டத்தைப் புறக்கணிக்க திமுக முடிவெடுத்துள்ளதாகவும் அறிவிக்‍கப்பட்டுள்ளது.