அடுத்த பரபரப்பு… இனி யாரும் வரக்கூடாது… திமுக கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் திடீர் எச்சரிக்கை…!

By Nanthini on மார்கழி 31, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். தனது கூட்டணி கட்சிகளை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் உள்கட்சி விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள், சிபிஐ மற்றும் மதிமுக தலையிட வேண்டாம் என்று எம்பி மாணிக்கம் தாகூர் எச்சரித்துள்ளார். பிரவீன் தமிழகத்தை உத்திரபிரதேசம் மாநிலத்துடன் ஒப்பிட்டதால் திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில் ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சியின் விஷயங்களை பொதுவெளியில் விமர்சிப்பது ஆபத்தானது என்று மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். மேலும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸுக்கு எதிரான கூட்டு வலிமையை இது பலவீனப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.